எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வந்தது.

இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த வலிமை படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

ஆம், அது மட்டுமின்றி தல அஜித்துக்கு வலிமை படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியானது.

வலிமை படத்தின் First லுக் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட மிகவும் செம மாஸான டீசர் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது வேற லெவல் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.