தல அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஹியூமா குரேஷி கடும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படமும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முடித்து ஏப்ரல் 14ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடுமாறு தல அஜித்தே வினோத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அதற்காக இனி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க தான் தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளாராம். அதன்படி அதற்கான திட்டமிடுதலையும் தற்போது இயக்குனர் வினோத் துவங்கியுள்ளாராம். வரும் நாட்களில் அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் இந்த படத்தின் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.