வலிமை படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார் தல அஜித். ஆம் கொரோனா தாகத்திற்கு பிறகு தற்போது தான் படங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்தில் துவங்கிய வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ராமோ ஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியது.

மேலும் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் என்பவருடன் தல அஜித் வீடியோ காலில் பேசிய புகைப்படங்கள் கூட வைரலாகின.

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தல அஜித் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.