விபூதி வாங்க வந்த பெண் பக்தை ஒருவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சாமியார் !!குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிலுமிசம்!!

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரத்தில் சீரடிபுறம் ஞான சக்தி பீடம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் சங்கரநாராயணன் அவரது மனைவி புஷ்பா அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தானும் தனது கணவரும் சேர்ந்து நடத்தும் ஞான பீடத்தில் வரும் பக்தர்கள் நன்றாக இருக்கலாம் எந்தவித சோதனையும் இன்றி நன்கு வாழலாம் என்ற நம்பிக்கையை கொடுத்து வந்துள்ளார் இவர்கள் பேச்சை நம்பி பல பக்தர்கள் அவர்களிடம் சென்று ஆசி பெற்று வந்துள்ளனர்.

இப்படியாக சென்று கொண்டிருக்க சங்கரநாராயணன் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் அதற்கு இது ஒரு ஆசி வழங்கும் முறை என்றும் இதைத்தான் எனக்கு இறைவன் பரிசாக அளித்து இருக்கிறான் என்றும் சமாளித்து வந்துள்ளார். இதனை எதிர்க்கும் சில பக்தர்களை அங்கு இருந்து வெளியே செல்ல துரத்தியும் இருக்கிறார் சங்கரநாராயணன். இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று ஞானசக்தி பீடத்திற்கு விபூதி வாங்க இளம்பெண் ஒருவர் வந்துள்ளார் அப்போது அவரிடம் நன்கு பேசி நம்பிக்கை உரியவராக மாறி அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார் சங்கரநாராயணன்.

குடித்த அந்த பெண் மயங்க அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சங்கரநாராயணன் அது மட்டுமல்லாமல் அவரது நிர்வாண புகைப்படத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை வரச்சொல்லி தொந்தரவு செய்து இருக்கிறார் சங்கரநாராயணன் இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில்
சங்கரநாராயணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.