விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாஜக..! தளபதிக்கு பாராட்டு…

கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற பசுமை திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ள நடிகர் விஜய்க்கு பாஜக மாநில துணை தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் மகேஷ் பாபு சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஹாஷ்டேகை உருவாக்கி வீட்டு தோட்டத்தில் செடி நடும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். மேலும், அந்த பதிவில் நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசனையும் டேக் செய்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கிரீன் இந்தியா சேலஞ்ச் மூமெண்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜயும் தனது வீட்டு தோட்டத்தில் செடியை நட்டு, அந்த புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து மகேஷ் பாபுவை டேக் செய்துள்ளார். அதற்கு மகேஷ் பாபுவும் நன்றி கூறினார். இந்த நிகழ்வினால், லாக்டவுனில் நீண்ட நாட்கள் பிறகு விஜயின் தற்போதைய புகைப்படத்தை பார்ப்பதாகவும், பசுமை திட்டத்தை மக்களுக்கு நினைவு படுத்தியதாகவும் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோசம் அடைந்தனர்.

இரு நடிகரிகளின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. ஆனால், பாஜக மூத்த உறுப்பினராக இருக்கும் வானதியின் பாராட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்வீட்டில், ” இளைய தலைமுறைக்கு “பசுமை” யைப்பற்றி கூற விழையும் நடிகர்கள் திரு. விஜய், திரு. மகேஷ் பாபு இருவருக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு உட்பட பல திட்டங்களையும், செயல்களையும் நேரடியாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் விமர்சனம் செய்திருக்கும் விஜய்யை தொடர்ச்சியாக பாஜகவினர் விமர்சித்து வந்தனர்.

நடிகர் விஜய் இந்து மதத்துக்கு எதிரானவர் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏழை மக்களுக்கு எதிரானது என்று நடிகர் விஜய் கருத்து தெரிவித்த போதும்கூட, வானதி ஸ்ரீநிவாசன் அதை எதிர்த்தார். இந்நிலையில், தற்போது விஜய்யை வெளிப்படையாக பாராட்டியிருப்பது அவரது ரசிகர்களிடையே சற்று ஷாக் கொடுத்துள்ளது.