விஜய்க்காக பீஸ்ட் படத்தில் பாடல் பாடிய தனுஷ்!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்-முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்ற ஒரு படம் தயாராக அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது ஆனால் திடிரெண்று யாரும் எதிர் பாராத நிலையில் திடீர் என்று முருகதாஸை அந்த படத்தில் இருந்து விலக்கியது சன்பிக்சர்ஸ் அதை தொடர்ந்து கோலமாவு கோக்கிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் ஒரு கதையை கூற அது விஜய்க்கு மிகவும் பிடித்துப்போக முருகதாசுக்கு பதிலாக நெல்சன் விஜய் படத்தை இயக்க நியமனம் செய்யப்பட்டார்.

இந்த படம் ஆரம்பமானது முதலில் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதுகிறார் என்ற செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது ஆனால் இதுவரை அது வதந்தியா அல்லது உண்மையா என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனிருத் ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர் ஏனெனில் அந்த பாடலை விஜய்க்காக தனுஷே பாடி உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பாக தனுஷ் பல ஹீரோக்களுக்கு தனது குரலில் பாடல்களை பாடி உள்ளார் ஆனால் இதுவரை அவர் எந்த ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்கு பாடலை பாடியதில்லை அப்படி பீஸ்ட் படத்தில் விஜய் காக தனுஷ் பாடலை பாடினால் இதுவே மாஸ் ஹீரோவுக்கு அவர் பாடிய முதல் பாடலாக இருக்கும் இதேபோல் தனது ஆரம்ப காலகட்டத்தில் விஜய் பல நடிகர்களுக்கு பாட்டு பாடியுள்ளார் அதில் தனது நண்பனான சூர்யாவுக்காக இரண்டு பாடல்களை விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையிலும் வேலை என்ற திரைப்படத்தில் அவருக்காக ஒரு பாடலைப் பாடி உள்ளார் தளபதி விஜய்.