தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள ரசிகர்களின் மிகவும் சோகமாக இருப்பவர்கள் என்று பார்த்தால் அது தல ரசிகர்கள் தான். போனி கபூர் தயரிப்பில் வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை தாண்டியது, இன்னும் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடாமல் வைத்துள்ளனர்.

மேலும் இடையில் அஜீத்துக்கு காலில் அடிபட்டு வலிமை படப்பிடிப்பு தள்ளி சென்றது குறிப்பிடத்தக்கது. 2020 தீபாவளிக்கு வெளியாகும் என வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு சோதனை மேல் சோதனையாக தற்போது 2021 தீபாவளி வரை வலிமை ரிலீஸ் தேதி தள்ளி சென்று விட்டது.

தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தல அஜித் அக்டோபர் 25 ஆம் தேதியில் இருந்து வலிமை படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்க உள்ளார். எப்படியாவது விரைவில் வலிமை படப்பிடிப்புகளை முடித்து குறைந்தது 2021 சம்மர் வெளியீடாக வலிமை வந்து விட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்.

அனேகமாக தீபாவளிக்கு வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர் பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரம். எனினும் பட ரிலீஸ் ஷூட்டிங் செல்வதை பொறுத்து தான்.