பில்லா, பில்லா 2, மங்காத்தா ஆகிய அஜித் நடித்த திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அமைத்துக்கொடுத்த தீம் மியூசிக் அஜித் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கிறார். எனவே, இப்படத்திற்கு என்ன மாதிரியான தீம் மியூசிக்கை யுவன் இசையமைக்கப்போகிறார் என தல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இதுபற்றி சமீபத்தில் யுவன் அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். என்னை தொடர்பு கொண்ட தல அஜித், பில்லா, பில்லா 2, மங்காத்தா ஆகிய படங்களுக்கு கிடார் கருவியை வைத்து தீம் மியூசிக்கை செய்திருந்தீர்கள். வலிமை படத்திற்கு கிடார் இல்லாமல் தீம் மியூசிக் அமையுங்கள் எனக் கூறினார். அதையே சவாலாக ஏற்று கிடார் இல்லாமல் தீம் மியூசிக்கை செய்துள்ளேன். அதேபோல் 3 பாடல்களையும் கம்போஸ் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.