நடிகர் அஜித் கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் தனது வலிமை பட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள இடங்களில் நடிந்து வருகிறது.

சில காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. நடுவில் இடைவேளை இன்றி படப்பிடிப்பு நடத்தி முடிக்க அஜித் முடிவு செய்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்தது சுவாரஸ்மான விஷயம் குறித்து இப்படத்தில் நடித்துள்ள கதிர் என்ற நடிகர் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, வலிமை படத்தில் எனக்கு சின்ன காட்சி தான். படப்பிடிப்பு சென்றதில் இருந்து அஜித் அவர்களையே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டோ எல்லாம் எடுக்க தோன்றவில்லை, யோகி பாபு என்னுடன் எல்லாம் அஜித் கிரிக்கெட் விளையாடினார்.

நான் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அஜித் என்னிடம் வந்து சார் பெயர் என்ன, எப்படி இருக்கிறீர்கள், நன்றாக நடிப்பை தொடருங்கள் என்று கூறினார்.

என்னை மதித்து வந்து பேசி சார் என்றெல்லாம் அவர் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என பேசியுள்ளார்.