வலிமை படத்துக்காக எளிமையாக நடந்து சென்ற தல அஜித் வீடியோ!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

இது போக கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி தக்ஷா ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் உலக சாதனை படைத்தார். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் first look வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். தற்போது பஸ் ஸ்டாப்பில் தல அஜித் நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் பஸ் ஓட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது