தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு தல அஜித் மற்றும் வில்லன் இடையேயான சில அதிரடி காட்சிகள் மற்றும் சில பைக் சேஸிங் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் first look போஸ்டரை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த போஸ்டர் வருகிற தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூரும் வலிமை படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார்.

இது பற்றி தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. First look போஸ்டர் ரிலீஸ் செய்வது குறித்து ஏற்கனவே படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனவே தீபாவளிக்கு வெளியாகவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை வலிமை படத்தின் first look போஸ்டர் இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லையெனில் 2021 புத்தாண்டுக்குதான் வெளியாகுமாம்.