அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஆரம்பித்தார்கள்.

படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை 45% நிறைவு பெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

கொரோனா காரணமாக எல்லா சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை மாறி வருகிறது.

முழுவதும் பிரச்சனை முடிந்துவிட்டதா என்றால் இல்லை, ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டிய நேரம்.

அண்மையில் தான் அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது, அஜித்தும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.


அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்தின் பெயர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.படத்தில் அஜித்தின் ஈஸ்வர் மூர்த்தி ஐபிஎஸ் என்பது தானாம்.

மேலும் பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகளை இந்தியாவில் நடத்த முடியாது என்பதால் படக்குழு வெளிநாடு சென்று ஷூட்டிங் நடத்தும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வலிமை படத்தில் தல அஜித் ஓட்டும் பைக் பற்றிய முக்கிய தகவலை முன்னணி நிறுவனமாகிய ஐனாக்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் ஒரு அதிரடியான சண்டை காட்சிக்காக, அஜித் ஹை என்ட் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று ஓட்டுகிறாராம். சாதாரணமான அனைவராலும் அதை ஓட்ட முடியாதாம். அஜித் ஒரு ரேசராக இருப்பதால் இது சாத்தியமாம்.

இந்த பைக் வைத்து அஜித் செய்யும் அதிரடி சண்டைக் காட்சிக்கு கண்டிப்பாக தியேட்டரில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது இன்னும் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் சண்டைக் கலைஞர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதால் இந்தியாவில் அதை படமாக்க முடியாது என்பதால் படக்குழு இந்த முடிவில் உறுதியாக இருக்கிறார்களாம். அஜித் சும்மா வந்தாலே தியேட்டரை தெறிக்க விடுவார்கள் தல ரசிகர்கள். இப்போ ஸ்போர்ட்ஸ் பைக் சாகசம் வேறு இருக்கிறதாம். உறுதியாக இந்த படம் அஜித்திற்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் அடித்து கூறப்படுகிறது. என்ன பங்காளிகளா தெறிக்க விடலாமா !