கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் வரை ‘வலிமை’ படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் உட்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் தற்போது வலிமை பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், இறுதிக்கட்ட படப்பிடிப்புக வேகமாக நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்ட படப்பிடிப்பை வேகமாக முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால், வலிமை குறித்த அப்பேட்டை வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்தனர். ரசிகர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த படக்குழு உரிய நேரத்தில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 50-வது பிறந்த நாளான மே -ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் முடியும் வரை வலிமை படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் வினோத் ஆகியோரிடம் அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து ரசிகர்கள் அஜித்தை கொண்டாட ஆரம்பித்தனர். ஏற்கனவே தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அஜித் சொன்னதாக வெளியான இந்தக் கருத்து அவரின் சமூக பொறுப்புணர்வை காட்டுவதாகவும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

எனினும், நடிகர் அஜித் சொன்னதாக வெளியாகியுள்ள தகவலின் உண்மைத் தன்மையை படக்குழு உறுதிபடுத்தவில்லை. நடிகர் அஜித் இந்தப் படத்தில் வலிமையான காவல்துறை அதிகாரியாகவும், பாசமிகுந்த குடும்ப தலைவராகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் பைக்ரேஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொங்கல் விருந்தாக நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’, விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனையொட்டி, தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழக அரசு அதற்கு அனுமதி அளித்தது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று மத்திய மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கும் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்