திரை உலகில் சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பாக பயணிப்பது நடிகர் நடிகைகளின் வழக்கம்.

ஆனால் ஓரிரு படங்களில் தோல்வியைக் கொடுத்தால் ரசிகர்கள் உடனே அவரை மறந்து விடுவார்கள் ஆனால் திரையுலகில் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்தாலும் தல அஜித்தை உச்ச நட்சத்திரமாக வைத்து அழகு பார்த்து வருகிறது.

அப்படி இருக்கும் ரசிகர்களுக்காக அவ்வபொழுது சிறப்பான ஹிட் படங்களை கொடுப்பதோடு சமூகத்திற்கு ஏற்ற படங்களையும் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

அப்படி இவர் சமீபத்தில் நடித்த விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்றதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நல்ல கருத்தை எடுத்துக் கொடுத்து இதை தொடர்ந்து தற்போது ஹச். வினோத்துடன் இணைந்து தல அஜித் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரசிகர்கள் அஜித்தை பார்த்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது சீக்கிரம் இப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட்டால் தல – யை நாங்கள் பார்த்து விடுவோம் என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் போல் வேடமணிந்த ஒருவருடன் நின்று அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ.