மீண்டும் தனித்துவமானவர் என்பதை நிரூபித்தார் அஜித்… தல போல் வருமா..?

தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர்களில் வித்தியாசமானவர் தனித்துவமானவர்கள் என்றால் அது தல இல்லை இல்லை நடிகர் அஜித்குமார் தான்.

அந்தக் காலம் முதல் இன்றுவரை திரையில் தோன்றும் ஹீரோக்களுக்கு பெயருக்கு முன்னால் அவர்களது ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அறுபதுகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன்… காதல் மன்னன் ஜெமினி கணேசன்… தொடங்கி பின்பு எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… காதல் இளவரசன் கமல்ஹாசன்… 90களில் இளைய தளபதி விஜய்… அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்… பின்பு லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன் என அவரது ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நாயகர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அதையே அழைத்து வந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் தன் பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் எனும் பட்டத்தையும் இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்படி தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் ரசிகர்கள் அவர்மீது இருந்த அன்பால் சில நேரங்களில் அப்படியே அழைத்து வந்தனர், ஆனால் திரைப்படங்கள் அவரது பெயர் போடும்போது அல்டிமேட் ஸ்டார் எனும் பட்டப்பெயர் அவரது கோரிக்கைக்கு இணங்க நீக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான தீனா திரைப்படத்தில் அஜித்குமார் ரவுடி கேரக்டரில் நடித்திருப்பார். அதனால் அவரை சுற்றி இருக்கும் பலர் அவரை தல என்று அழைப்பார்கள். இதனாலேயே அவர் பெயரோடு தலையும் ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு ரசிகர்கள் திரை நட்சத்திரங்கள் அனைவரும் அஜித்குமார் அவர்களை தலை என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர். பல வருடங்களாக தல என்று அழைத்து வந்த நிலையில்தான் அஜித்குமார் சார்பாக அவரது செயலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களில் தன்னை பற்றி எழுதும்போதும் பேசும்போதும் இயற்பெயரான அஜித்குமார் மட்டும் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியில்லை என்றால் அஜீத் என்றோ எகே என்றோ மட்டும் குறிப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உறவை வெற்றி மன அமைதி மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது தான் என்றைக்கும் வித்தியாசமானவன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் நடிகர் அஜித்தின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

முழு வீடியோ கீழே உள்ளது.

இந்த பதிவில் தல அஜித் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் படங்களின் அப்டேட்டுகள் பல சுவாரசிய நிகழ்வுகள். அவரது புகைப்படங்களை புதிய படத்தின் ட்ரைலர் மற்றும் படக்காட்சிகள், மேலும் பல அழகான தருணங்களை நாங்கள் இந்த இணைய பக்கத்தில் பகிர்வோம்! பார்த்து தெரிந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.