வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தின் முழு ஸ்க்ரிப்டை முடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

இந்த நிலையில் இந்த படத்தை பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி சூரரைப் போற்று படத்தை போன்றே இந்த படத்தின் கதையும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இதுவரை தல அஜித் அவருடைய சினிமா வாழ்க்கையில் தொடாத ஒரு கேரக்டர் இந்த திரைப்படத்தில் இருக்குமாம். கண்டிப்பாக வித்தியாசமான ஒரு தல அஜித்தை இந்த தல 61 படத்தில் பார்க்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.