மாமனாருக்கு ஜாமீன் போட்ட மருமகன்!! கணவனே மனைவியை அடித்துக் கொன்ற பரிதாபம் !!


ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி இவர் விவசாயத் தொழில் பார்த்து வருகிறார் இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் மூர்த்திக்கு பூர்வீக சொத்து 2 ஏக்கர் ஆகாரம் கிராமத்தில் அமைந்துள்ளது தனது மனைவியின் தந்தை தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் செய்வதறியாது தவித்து வந்த நிலையில் அவருக்கு தனது சொத்தை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த நபரிடம் அடமானம் வைத்து கடன் பெற்று மூர்த்தி தனது மாமனாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.


கடனை வாங்கியதோடு சரி மூர்த்தியின் மாமனார் வட்டி கூட ஆறு வருடங்களாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த கடன் கொடுத்தவர் மூர்த்தியை கடுமையாக எச்சரித்து தாக தெரிகிறது இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது இதையடுத்து வெள்ளிக்கிழமை மதியம் மூர்த்தி தனது மனைவியிடம் மீண்டும் சொத்து தொடர்பாக பிரச்சினையை எழுப்பி உள்ளார் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மூர்த்தி அருகில் இருந்த சுத்தியலை எடுத்து கலைச்செல்வியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார் இதில் நிலைகுலைந்து போன கலைச்செல்வி சுருண்டு தரையில் விழுந்துள்ளார்.

ஒரு கணம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த மூர்த்தி மனைவியை எழுப்ப முயற்சிக்க அவர் இறந்து கிடந்ததை உணர்ந்துள்ளார் பதறிப்போன மூர்த்தி செய்வதறியாது தவித்து தனது வீட்டின் தோட்டத்தில் இருக்கும் விவசாய நிலம் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் கண்முன்னே தாய் மற்றும் தந்தை இறந்து கிடந்ததை பார்த்து அந்த மூன்று குழந்தைகளும் கதறி அழுதனர் விவரம் அறிந்த காவல்துறை விரைந்து வந்து சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது பின் நிற்கதியாக நிற்கும் இந்த மூன்று குழந்தைகளுக்காக அரசே தலையிட்டு மூர்த்தியின் நிலத்தை மீட்டு இந்த குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டுமென கிராம பொதுமக்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.