அஜித் ரசிகர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை.

அஜித்தின் வலிமை படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் தல ரசிகர்களை சோதித்து வருகின்றனர்.

வலிமை படம் எப்போது வந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அதற்குக் காரணம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனராக இருக்கும் வினோத் இயக்கத்தில் தல அஜித் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த போலீஸ் கதையில் நடிப்பது தான்.

போலீஸ் கதையில் பயங்கர வித்தியாசம் காட்டி எடுப்பதில் பெயர் போனவர் வினோத். ஒருவழியாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு தல ரசிகர்களை சமாதானம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் வருகின்ற தீபாவளிக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வாட்டி தல தீபாவளி கன்ஃபார்ம்.