போடுடா வெடிய, வலிமை வில்லன் கொடுத்த அப்டேட் ! தலைகால் புரியாமல் கொண்டாடும் தல அஜித் ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்த போதிலும் பாதி படப்பிடிப்புகள் தான் முடிவடைந்துள்ளன.

வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட வலிமை படம் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் டெல்லியில் செட் போட்டு எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இதற்காக படக்குழு விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அஜித் தரப்பில் இருந்தோ அல்லது வினோத் தரப்பிலிருந்தோ இதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் தல அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் முதல் முறையாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடத்துக் கொண்டிருக்கிறார் என்பது அரசல் புரசலாக வந்த தகவல்தான்.

ஆனால் அவர்தான் வில்லனா, அல்லது வேறு யாரேனும் இருக்கிறார்களா என தல ரசிகர்கள் பலரும் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் தடுமாறி வந்தனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் கார்த்திகேயா நடிப்பதை உறுதி செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு நடிகரான கார்த்திகேயா தமிழில் அஜித்தின் வலிமை படத்தை பற்றி கூறியது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

கார்த்திகேயா தனது டுவிட்டரில், தல அஜித் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்வதாகவும், அதே நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகிறது என தல ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.

இதனை தல ரசிகர்கள் ட்விட்டரில் வெயிட்டிங் ஃபார் தல தரிசனம் என இந்திய ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.