தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பால் மட்டுமே முன்னேறி முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.

மேலும் அஜித் நடிப்பதில் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றிலும் அதிகமாக ஆர்வம் கொண்டவர் என்பதும் நாம் அறிந்ததே.

அந்த வகையில் அஜித் பைக்கிலேயே ஒடிசா வரை சென்று வந்ததாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதாவது தல அஜித் தன்னுடைய பர்சனல் லைஃப்பையும், தனது வேலையையும் தனக்கு பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுவதையும் சமமான நிலையில் பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறிருக்க தல அஜித் தற்போது கிடைத்திருக்கும் லாக் டவுன் லீவில் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து பைக்கிலேயே ஒடிசா வரை சென்று வந்திருக்கிறாராம்.

மேலும் இந்த செய்தியை கேட்ட தல ரசிகர்கள், ‘அந்த கண்கொள்ளா.. காட்சியை எங்களால பார்க்க முடியலையே!’ என்ற வருத்தத்தில் இருக்கின்றனர்.