புதுபேட்டை திரைப்படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது இந்த நடிகை தானா? – அட இவரு இப்போ சர்ச்சை நடிகையாச்சே!! பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த புகைப்படம் !! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தென்னிந்திய திரையுலகை பொருத்தவரை முன்பை விட தற்போது பல மாறுபட்ட கதைகளை கொண்ட திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் பல புதுமுக மற்றும் மாறுபட்ட எண்ணங்களை கொண்ட இயக்குனர்களே ஆகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தங்களுக்கென தனி ஒரு பாணி சினிமாத்தனத்தை இன்றளவும் தொடர்ந்து படங்களில் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் தனக்கென தனி சினிமா பாணியை வைத்திருப்பவர் தான் பிரபல இயக்குனர் செல்வராகவன். இவரது படங்கள் பெரும்பாலும் ரசிகர்களின் மத்தியில் புதிய சினிமாவையும் மாறுபட்ட கதையையும் கொண்டதாகவே இருக்கும். அந்த வகையில் ஆரம்பத்தில் எழுத்தாளராக தனது திரைபயனத்தை தொடங்கியவர். தனது தம்பியும் தற்போது பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் அவர்களை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இந்த படம் தமிழ் திரையுலகில் பலத்த வரவேற்பை பெற்றதோடு மக்களிடையே பெருமளவு வெற்றியை பெற்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் அவர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் செல்வராகவன். இந்நிலையில் தனுஷ் அவர்களை வைத்து இவர் இயக்கிய புதுபேட்டை வெளிவந்த காலத்தில் பெரிதளவு வெற்றி பெறவில்லை எனினும் தற்போது அந்த படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அந்த படம் வெளியாகி இன்றோடு பதினைந்து வருடங்கள் வெளியான நிலையில் இணையத்தில் பலரும் அந்த படத்தை ஹெஷ்டேக் செய்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய திரைப்பட நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் இந்த படம் கூறிய பல தகவல்களை கூறியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகிகளாக முன்னணி நடிகை சினேகா மற்றும் சோனியா அகர்வால் நடித்து இருந்தார்கள். மேலும் இந்த படத்தில் சினேகாவின் கதாபாத்திரம் மக்களிடையே பெருமளவு பேசப்பட்டதோடு பலத்த வரவேற்பையும் பெற்றது. இப்படி இருக்கையில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது காயத்ரி ரகுராம் தானாம். இதற்காக அவருக்கு போடோஷூட் எல்லாம் எடுத்த நிலையில் அந்த படம் இயக்குவதற்கு ஆறு மாதங்கள் ஆகும் என இயக்குனர் சொல்ல இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். மேலும் இவர் தளபதி விஜய் அவர்களின் யூத் திரைபடத்தில் வரும் ஒரு பாடலில் சிம்ரனுக்கு பதில் இவர் தான் நடனமாட இருந்ததாம். இந்த படம் வெளியாகி இத்தனை வருடங்கள் ஆனா நிலையில் இந்த தகவல்கள் வெளியாகி வைராளாகி வருகிறது.

By admin