பீஸ்ட் படத்தில் அஜித்தை வம்புக்கு இழுத்த விஜய்..!! ஆமை என்று குறிப்பிட்டதால் எழுந்த சர்ச்சை.,!!

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்று வெளியாகி இருக்கும், பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் பேசிய வசனங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியாகியுள்ளது. மிரட்டலான உளவாளி கெட்டப்பில், நடிகர் விஜய் ஒட்டு மொத்த கதையும் தோளில் தூக்கி சுமப்பதாக படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் படத்தை கழிவி ஊற்றி வருகின்றனர். இந்த நிலையில், படத்தில் நடிகர் விஜய் பேசியுள்ள பஞ்ச் வசனம் ஒன்று அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பீஸ்ட் படத்தில் வரும் ஒரு காட்சியில் வில்லனிடம் ஹிந்தியில் பேசுவார் திடிரென்று தமிழில் பேச அவருக்கு அது புரியாமல் முழிக்க“உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா, உனக்காக எல்லா இடத்திலயும் ஹிந்தியை ட்ரான்ஸ்லேட் செஞ்சுகிட்டு இருக்க முடியாது” என ஒரு வசனத்தை விஜய் பேசுகிறார். இதை வைத்து, தளபதி விஜய் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கிறார் என அவரது ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.அது மட்டுமின்றி ஒரு காட்சியில் விஜய் ஒருவரை தொங்கவிட்டு தூக்கி வருவார் அப்போது VTV கணேஷ் ஆமையை தூக்கி வரான் என்று கூறியிருப்பார்.இதனை அஜித்தைதான் அவர் கூறிப்பிட்டுள்ளார் என சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

By vaithy