பிகில், மெர்சல் டூப் காட்சிகள் லீக்காக இதுதான் காரணம்.. ஆச்சர்யத்தில் அசந்து போன விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் பிகில் மற்றும் மெர்சல் படத்தின் டூப் போடப்பட்ட காட்சிகள் லீக்கானதன் பின்னணியில் இப்படி ஒரு செம சூப்பரான விஷயம் உள்ளது. டூப் நடிகர் ஸ்ரீராம் என்ற பெயரில் ஃபேக் ஐடி அந்த காட்சிகளை எங்கே இருந்து எடுத்து உள்ளது என்கிற ரகசியமும் தற்போது அம்பலம் ஆகி விட்டது. அந்த ஒரு காட்சி மட்டுமின்றி, ஏகப்பட்ட பிகில் மற்றும் மெர்சல் படக் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது என்பதும் ரசிகர்களுக்கு விருந்தாக கிடைத்துள்ளது.

டூப் காட்சிகள் லீக்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் மற்றும் பிகில் படத்தின் VFX காட்சிகள் லீக் செய்யப்பட்டு, விஜய்க்கு டூப் போட்ட நடிகர் யாரென்ற ரகசியமும் கசிந்து வைரலானது. டூப் நடிகர் ஸ்ரீராம் தான் அதனை கசியவிட்டார் என்றும், இல்லை அது என் ஐடியே கிடையாது ஃபேக் என்றும் அவர் ட்வீட் போட விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

மொத்த VFX பிரேக்டவுன் வீடியோவும்

சில நாட்களுக்கு முன்பாக பிகில் படத்தின் மொத்த VFX காட்சிகளின் பிரேக்டவுனையும் NY VFXWAALA எனும் யூடியூப் தளம் வெளியிட்டுள்ளது. அதே போல ஏற்கனவே மெர்சல் காட்சிகளையும் இந்த யூடியூப் தளம் ரிவீல் செய்துள்ளது. இதில், இருந்து ஒரு சில காட்சிகளை கட் செய்து தான் லீக் வீடியோ வைரலாகி உள்ளது.

அசந்து போன ரசிகர்கள்

தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து இயக்குநர் அட்லி எடுத்த மூன்று மெகா பிளாக்பஸ்டர் படங்களின் VFX பிரேக்டவுனையும் பார்த்த தளபதி ரசிகர்கள், இயக்குநர் அட்லியின் தொழில்நுட்ப யுக்திகளை கண்டு அசந்து போயுள்ளனர். ஒரு காட்சி லீக்கானதையே விஜய் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், ஒட்டுமொத்த காட்சியையும் கண்ட ரசிகர்கள் அந்த வீடியோக்களை வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.

பிரம்மாண்ட மேஜிக்

க்ரீன் மேட் உதவியால், இவிபி ஸ்டூடியோவில் போடப்பட்ட சின்ன ஃபுட்பால் ஸ்டேடியத்தை இன்டர்நேஷனல் ஸ்டேடியமாகவும், இரண்டு விஜய்யை ஒரே சமயத்தில் கட்டித் தழுவும் காட்சிகள் என ஏகப்பட்ட பிரம்மாண்ட மேஜிக்கை கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில், அவ்வளவு நுட்பமாக செயல்பட்டு உருவாக்கி உள்ளனர். அதற்காகவே ஒரு ஹாட்ஸ் ஆஃப் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மீண்டும் அட்லி இயக்கத்தில்

தளபதி விஜய்யை இந்த அளவுக்கு பிரம்மாண்டமாகவும், வித வித கெட்டப்புகளிலும் காட்டி வரும் இயக்குநர் அட்லி, மீண்டும் ஒரு முறை நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், இன்னும் ஒரு படி மேலே தளபதியை காட்ட அவரால் மட்டும் தான் முடியும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.