பாரம்பர்ய உடை… உடுக்கை அடி! இவர் பாடும் அழகே தனிதான்.. அழகான மலையாளப் பெண்ணுக்குள் இப்படி ஒரு திறமையா?

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர். அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

பெண்கள் இப்போதெல்லாம் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுவது பேஷன் ஆகிவிட்டது. ஒருவகையில் அதற்கு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரிலும் காரணம். இதோ இங்கேயும் ஒரு பெண் தன் தனித்திறமையால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறார். அப்படி, அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?ஆஷா சுரேஷ் நாயர் என்னும் அந்த இளம்பெண் உடுக்கை அடித்து செம க்யூட்டாக கிருஷ்ண கீர்த்தனம் பாடுகிறார். அதுவும் நம் கலாச்சார உடையில் செம க்யூட்டாக அந்த மலையாள இளம்பெண் இசையும், இசைத்து பாடும் அழகை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

By admin