தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்டகலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


முதலில் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன அதன் பிறகு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வலிமை படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என படக்குழு உறுதி அளித்தது, அப்படி இருக்கும் வகையில் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த அஜித் படக்குழு அனுப்பிய காரில் வராமல் பைக்கிலேயே ராமோஜிராவ் பிலிம்சிட்டி வந்துள்ளார்.

அவர் சாலையில் பைக்கில் வலம் வரும் பொழுது பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன, இதற்கு முன் அஜித் ஹைதராபாத் வருவதற்காக விமானத்தில் செல்லாமல் தன்னுடைய சொந்த பைக்கிலேயே ஹைதராபாத் வந்தது ரசிகர்களிடைய வைரலானது.

வலிமை திரைப்படத்திலிருந்து அஜித் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் இந்த மாதம் முழுவதும் படமாக்கப்படும் என படக்குழு உறுதி அளித்துள்ளது, இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் அவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார்.

மேலும் யோகி பாபு, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த வலிமை திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.