பா கிஸ்தானில் கலக்கும் தல அஜித் ! தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவே முதல் முறை ! ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது.

இரண்டுமே வெவ்வேறு கதைக்களத்தை கொண்டு உருவானது, இரண்டுமே செம ஹிட் தான். விஸ்வாசம் குடும்பத்தை மையப்படுத்திய கதை, நேர்கொண்ட பார்வை பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம்.

அடுத்ததாக அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வந்தார். லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு நின்றுவிட்டது, அநேகமாக இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்பட இயக்குனர் வினோத் அவர்களுக்கு பிறந்தநாள், யுவன் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார். உடனே ரசிகர் தலைவா வலிமை அப்டேட் சொல்லுங்க என யுவனிடம் கேட்க, அவரோ விரைவில் இப்பட அப்டேட் வரும் என பதில் டுவிட் செய்துள்ளார்

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை அஜித்தின் முந்தைய படம் விஸ்வாசம். இந்த படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வட இந்திய டீவி சேனல்களில் போடப்பட்டு வருகிறது. மேலும், படத்திற்கு சேனல்களில் வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

அதே போல், அந்த படத்தின் ஹிந்தி டப் பாகிஸ்தானின் டீவிக்களிலும் போடப்படட்டுள்ளது. ஹிந்தியின் டப் செய்யப்பட்டு பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்ட முதல் தமிழ் படம் விஸ்வாசம் என முதல் கொண்டாடி வருகின்றனர்.