நடிக்க கூட்டிசென்று அப்படியெல்லாம் நடந்து கொள்வாங்க! உண்மையை உடைத்த நடிகை நீலு..

சினிமாவை பொருத்தவரை ஹீரோ, ஹீரோயின், காமெடியன்களுக்கு அடுத்து கவனிக்கப்பட கூடியவர்கள் தோழிகள், அம்மா, அம்மா கதாபாத்திரங்கள் தான். அவர்களுக்கு அடுத்து இருப்பவர்களை படுமோசமாக கவனிப்பதாக நடிகை நீலு ஆண்டி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம்புலி படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக படுக்ளாமர் ஆண்டியாக நடித்தவர் நீலு. இப்படத்தின் மூலம் பிரபலமான நீலு ஒருசில படங்களில் நடித்திருப்பார். சிங்கம்புலி படத்திற்கு முன்பே ஆயுத எழுத்து, புலி, ஆஞ்சநேயா போன்ற படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நீலு. சமீபத்தில் அளித்த பேடியொன்றில் துணை நடிகைகள் படும் கஷ்டங்களை உடைத்து பேசியுள்ளார். ஷூட்டிங் நடக்கும் இடத்தில் துணைநடிகைகளுக்கு தனியாக கழிவரையோ, துணி மாற்றும் இடமோ இருக்காது. கதாநாயகி கேரவனி மாற்றச்சொல்வார்கள்.அங்கு போனால் நடிகைகளின் உதவியாளர்கள் விரட்டிவிடுவார்க: மேலும் ஓய்வு எடுக்கக்கூட இடமிருக்காது. இரவு பகல் என்று நடித்து வரும் போதெல்லாம் உட்கார கூட சேர் கொடுக்க மாட்டார்கள்.

அதேபோல் எங்களை ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இந்த கேரக்டர் அந்த கேரக்டர் என்று பல விதத்தில் அழைப்பார்கள். எங்களின் பெயரை கூட கூறி அழைக்கமாட்டார் என்று கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க, குட்டையான ஆடையை கூட அணிந்து நடிக்க சொல்வார்கள்.சூழ்நிலையால் சிலர் ஓகே நடிக்க ஒப்புக்கொண்டும் சிலர் வேண்டவே வேண்டாம் என்று கூறியும் சென்று விடுவார்கள். இதைவிட பல பிரச்சனைகள் இருக்கிறது. குட்டையான ஆடையை அணிந்து நடிக்க மாட்டோம் என்று கூறினால் நடித்தவரைக்கும் உள்ள சம்பளத்தை கூட தரமாட்டார்கள் என்ற கூறியுள்ளார் நடிகை நீலு.

By admin