திருமணம் செய்து வைக்க சொல்லி தந்தையை கடுப்பேற்றிய மகன் !!மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவானூர் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கேசவன் அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இதில் இரண்டு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் திருமணம் செய்து வைத்த தந்தை கேசவன் தனக்கு கடைசியாக இருக்கும் மகனுக்கு மட்டும் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை இருபத்தி ஒன்பது வயதாகும் சிவமணி குடி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் அவர்கள் உறவினர்கள் யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அவ்வப்போது வீட்டிற்கு போதையில் வரும் சிவமணி தனது தந்தையை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிலேயே மது அருந்திய சிவமணி தனது தந்தையை கடுமையான சொற்களால் திட்டி வந்திருக்கிறார் அது மட்டுமின்றி தனது தந்தையை போட்டு அடி உதை கொடுக்க ஆரம்பித்த அவர் ஒரு கட்டத்தில் கையில் கிடைக்கும் பொருளால் தாக்க ஆரம்பித்துள்ளார் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தந்தை கேசவன் வீட்டின் உள்ளே வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து கோபத்தில் தனது மகனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து போன சிவமணி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்கியுள்ளது. கேசவன் சிவமணியை அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாகவும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது போதை பழக்கத்தினால் தந்தையே மகனை வெட்டும் அளவிற்கு சென்றதை எண்ணி அந்த கிராமமே வருத்தத்தில் இருக்கிறது.