தளபதி விஜய் சொன்னதால தான்… நான் இன்னும் நடிச்சிகிட்டு இருக்கேன்.. அருண்விஜய் ஓபன் டாக் !

தளபதி விஜய் சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் தான், நான் இப்பவும் நடிச்சிகிட்டு இருக்கேன், என அருண் விஜய் மனம் திறந்து பேசியுள்ளார். தடம், செக்கச்சிவந்த வானம், மாஃபியா உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் அருண் விஜய் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்த அருண் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவில் அனைவராலும் பாராட்டப்படும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

பல தோல்விகள் அவமானங்கள்

பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான அருண்விஜய் தற்பொழுது தமிழில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மிகப் பிரபலமான மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இயக்கிய “முறை மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட அருண் விஜய் பல தோல்விகளையும் பல அவமானங்களையும் தாண்டி தற்பொழுது கடின உழைப்பின் மூலம் மாஸ் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிப்பதை விட்டுவிட்டு

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வரும் அருண் விஜய் மிகப் பெரிய திரை பின்புலத்தை கொண்டிருந்தாலும் ஆரம்ப காலத்தில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியையே தழுவி வந்தன. இந்த நிலையில் நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பில் ஈடுபட குடும்பத்தார் இவருக்கு யோசனை வழங்கிய நிலையில் தளபதி விஜய் சொன்ன வார்த்தைக்காக நடிப்பதை இன்று வரை விடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பில் ஈடுபட

முறை மாப்பிள்ளை, கங்கா கௌரி, பாண்டவர்பூமி, இயற்கை உள்ளிட்ட ஓரிரு வெற்றி படங்களையும், பல தொடர் தோல்வி படங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த அருண் விஜய் ஜனனம் என்ற திரைப்படத்திற்கு பிறகு குடும்பத்தாரின் வற்புறுத்தலுக்கு இணங்க திரைப்பட தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்து, அதற்காக தளபதி விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க நேரில் அணுகியுள்ளார்.

சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க

அப்போது அருண், தான் இனி நடிப்பதை முழுவதுமாக விட்டுவிட்டு திரைப் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த உள்ளேன் என கூற, அதைக்கேட்டு ஷாக்கான விஜய், “ஏன் அருண் இந்த மாதிரி ஒரு டெஷிஷன் எடுத்து இருக்கீங்க, நீங்க ஒரு லவ்லி ஆக்டர், சூப்பரா டான்ஸ் ஆடுறீங்க, செமயா பைஃட் பண்றீங்க..

உங்கள எனக்கு பிடிக்கும்

உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த மாதிரி டெஷிஷன எப்போதும் எடுக்காதீங்க நீங்க தொடர்ந்து நடிங்க” என மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். பதிலேதும் பேசமுடியாமல் இருந்த அருண், விஜய்யின் அந்த நம்பிக்கையூட்டும் பேச்சை கேட்டுவிட்டு வெளியில் வந்து விஜய் சொன்னதை யோசித்துப் பார்த்த அந்த நொடி என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வாழ்வில் மறக்க முடியாத

அன்னைக்கு விஜய் சார் சொன்ன அந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளால் தான் நான் இப்பவும் நடிச்சுக்கிட்டு இருக்கேன். என தன் வாழ்வில் மறக்க முடியாத அந்த தருணத்தை பகிர்ந்துகொண்ட அருண் விஜய்யின் அந்த அரிய காணொளி தற்பொழுது அனைவராலும் பார்க்கப்பட்டு இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

ஓடிடி தளத்தில் வெளியாக

அருண் விஜய்யின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் உருவான நீண்ட வருடங்களாக வெளியிடப்படாமல் கிடப்பில் கிடந்த “வா டீல்” திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், மேலும் அக்னிச் சிறகுகள், பாக்சர், சினம் ஜிந்தாபாத் போன்ற படங்களில் அருண் நடித்து கொண்டு வருகிறார்.