தல 61 ல் இது மட்டும் நடந்தா வேற லெவலில் இருக்கும் GVகூறிய உண்மை இதோ !

அஜித் – சுதா கொங்கரா கூட்டணி இணையுமா என்ற ரசிகரின் கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் பதிலளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதுவரை வெளியான பாடல்கள் யாவுமே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதர பாடல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனிடையே, ‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை யாருமே அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

தற்போது, ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ வடிவில் பதிலளித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதில் அஜித் – சுதா கொங்கரா கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். அந்தப் பகுதி:

கேள்வி: அஜித் சார் பற்றி சொல்லுங்க ப்ரோ

ஜி.வி.பிரகாஷ்: எனது முதல் படம் வெயில் முடிந்தவுடன், ஒப்பந்தமான படம் கிரீடம் தான். அவ்வளவு பெரிய ஸ்டார் ஒரு படம் முடித்த என்னை மாதிரியான இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தார் அஜித் சார். அந்தப் படத்தில் உள்ள பாடல்கள் இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் சார் ஒரு சிறந்த மனிதர்

கேள்வி: அஜித் சார் – சுதா கொங்கரா படம் நடக்குமா?

ஜி.வி.பிரகாஷ்: அது உண்மையில் செமயான கதை. அந்தப் படம் நடந்தால் செமயாக இருக்கும். சூரரைப் போற்று படத்தில் எப்படி ஒரு கட்டத்தை அடைத்தார்களோ, அதே போல் இன்னொரு செமயான கதை ஒன்று செய்திருக்கிறார் சுதா கொங்கரா. பெரிய ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும். சுதா அந்தக் கதையை என்னிடம் கூறினார். ரொம்ப அற்புதமான ஒரு கதை. அது நடந்தால் அற்புதமாக இருக்கும்.