தல 61 : பக்கா ஆக்ஷன் திரில்லர் ரெடி ! கதைக்களம் குறித்து வெளியான யாரும் எதிர்பாராத மாஸ் தகவல் இதோ

வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த திரைப்படமான தல 61 திரைப்படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் சூரரை போற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா அவர்கள்தான் இந்த படத்தை இயக்க போகிறார்கள் என்பது ஏறக்குறைய தற்போது உறுதி ஆகியுள்ளது.

சூரரைபோற்று படத்தை முடித்த உடனேயே சுதாகொங்கரா ஒரு மாஸான இன்னொரு ஸ்க்ரிப்டை உருவாக்கியிருக்கிறார் என்றும், அந்த கதையை தல அஜித்திடம் கூறி ஓகே வாங்கி விட்டார் என கடந்த வாரத்தில் தகவல்கள் வெளியாகின.

இதை தொடர்ந்து இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமான கதையாக இருக்கும் எனவும், சமூகத்தில் நடக்கும் முக்கிய ஒரு பிரச்சனை பற்றி இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அரசியல் சார்ந்த சில காட்சிகளும் இப்படத்தில் இருக்குமாம் . வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகுமாம்.