தல அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் அல்லது 2021 ஜனவரி மாதம்தான் துவங்கும் என கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அஜித்தின் 61வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுபற்றி தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தை இயக்க தமிழ் சினிமாவின் மூன்று முன்னணி இயக்குநர்கள் நடுவே மறைமுக போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. அதில் முதலில் இடம்பெறுபவர் இயக்குநர் சிவா. விஸ்வாசம் படத்தை முடித்ததும் கண்டிப்பாக மீண்டும் இணைவோம் என அஜித்தே அவரிடம் கூறியதாகவும், அதனால் ஒரு பக்காவான ஸ்க்ரிப்டுடன் சிவா ரெடியாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இரண்டாவதாக இயக்குனர் விஷ்ணுவர்தன். சமீபத்தில் தல அஜித் இவரை தொடர்பு கொண்டு கதை பற்றி பேசியதாகவும், அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போக, அதே கதையை முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் சொல்ல அஜித் கூறியதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அந்த வகையில் இயக்குநர் விஷ்ணுவர்தனும் பக்காவான கதையை அஜித்திற்காக ரெடியாக வைத்துள்ளார். இறுதியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் பட இயக்குனரான இவர் சமீபத்தில் அஜித்தை தொடர்பு கொண்டு பேசியதாகவும், விரைவில் அஜித்திடம் அவர் ஒரு கதை கூற இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஒரு வேளை லோகேஷ் கனகராஜ் கூறும் கதை அஜித்திற்கு பிடித்திருந்தால் தல 61 படத்தை அவரே இயக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே அஜித் இறுதி முடிவை எடுப்பார் என அஜித் தரப்பிலிருந்து வெளியாகும் தகவல்கள் கூறுகிறது.