இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஒரு நபர். கடைசியாக ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலமாக மக்களை சந்தித்த அவர், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். நிருபர் கேட்ட கேள்விக்கு அஜித் குறித்து பேசும்போது, ஒரு முதல்வர் முன்னாடியே இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு பெரிய கெத்து வேண்டும் என்று கலைஞருக்கு பாராட்டு விழா எடுக்கும் பொழுது நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு வர சொன்னது குறித்து விழா மேடையில் அஜித்குமார் பேசியதை சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்ததாக ஒருவர் தனது ரசிகர் மன்றங்களை கலைக்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்… ஒரே ஒரு ரசிகர் மன்றத்தை உருவாக்குவதற்கு பல காலம் போராட வேண்டியது இருக்கிறது அவ்வளவு எளிதாக அத்தனை ரசிகர் மன்றங்களையும் ஒருவர் கலைக்கிறார் என்றால் அதைவிட அவர் பெரிய செயல்களை செய்ய போகிறார் என்று அர்த்தம் என பெருமையுடன் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தல அஜித் அவர்களை ஆஸ்கார் விருது வென்ற ஜோக்கர் திரைப்பட நாயகனுடன் ஒப்பிட்டது குறிப்பிடத்தக்கது.