தல அஜித்தை பற்றி தரக்குறைவாக கூறிய பிரபல பத்திரிக்கைக்கு சங்கு ஊதிய அஜித் ரசிகர்கள் ! மிரளும் திரையுலகம்

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தல அஜித்தை பற்றி யாரேனும் தவறாக பேசி விட்டால் போதும். அவரது ரசிகர்கள் தவறாக பேசி அவர்களை தாறுமாறாக விளாசி விடுவார்கள்.

இது ஒருபுறமிருக்க ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்று தல அஜித் எந்த ஒரு பிரச்சனைக்கும் வீட்டை விட்டு வெளியில் வராதவை கலாய்த்து புகைப்படம் வெளியிட்டுள்ளதை கண்டு கோபமடைந்துள்ளனர் தல ரசிகர்கள்.

தல அஜித் சமீபகாலமாகவே எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அவர் சந்தித்த சில கசப்பான அனுபவங்களால் தொடர்ந்து மீடியாக்களை வெறுத்து வருகிறார்.

இதனை ஒரு குற்றமாக பலரும் கூறிக் கொண்டிருந்த வேளையில் தற்போது பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று சமீபத்தில் ட்ரெண்டான ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை போல, வெளியே வரமாட்டேன் போடா என ஒரு போஸ்டரை ரெடி செய்து அதில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இதனால் தற்போது ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் #விபச்சாரவிகடன் என்று இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்