தல அஜித்தின் வலிமை படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தற்பொழுது தனக்கென ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் அஜித் ஆவார். மேலும் இவர் நடிக்கும் அனைத்துத் திரைப்படங்களும் ஹிட்டானவை அதே போல மாஸாவும் இருக்கும் என்பது உண்மையாகும்.

அத்தோடு கொரோனா டக்டவுனை அடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இன்னும் திரையரங்குகளில் தல அஜித்தின் படம் வெளியாகாத நிலையில் தல ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

அத்தோடு மேலும் தற்பொழுது தல அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது அதாவது அஜித் நடித்து வரும் அடுத்த படமான வலிமை என்ற படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதனை இப்படத்தின் தயாரிப்பாளர் ரோனிகபுர் வெயிட்டுள்ளார்.

அதாவது வலிமை படத்தின் படப்பிடிப்பு 95 வீதம் நிறைவடைந்தது என்றும் இன்னும் படப்பிடிப்பு முடிய சில நாட்கள் தான் இருக்கின்றன என்றும் வலிமை படத்தின் ”பெஸ்ட் லுக்” தல அஜித்தின் பிறந்த தினத்தில் வெளியிடப்படும் என்றும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார். இதனைக்கேட்ட ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.