தளபதி விஜய் சினிமாவில் நுழைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்.

எஸ் ஏ சந்திரசேகர் விஜய் கூட்டணியில் வெளிவந்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் மிகப்பெரிய இயக்குனரின் மகன் என்ற பெயர் இருந்தது.

அப்பேர்ப்பட்ட தந்தையை சமீபகாலமாக விஜய் கடுமையாக எதிர்த்து வருவதாக தெரிகிறது. அதற்கு சசியின் முட்டாள்தனமும் காரணம் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

விஜய்க்கு அடிப்படையில் அரசியல் ஆசை இருந்தாலும் அதற்கான நேரம் வரும் வரை பொறுமையாக உள்ளார். ஆனால் அவரது தந்தைக்கு கொஞ்சமும் பொறுமை இல்லையாம்.

அடிக்கடி பேட்டிகளில் தேவையில்லாமல் அரசியல் பேசி தன்னுடைய படங்களின் ரிலீசுக்கு பெரிய தடையாக இருப்பதாக எண்ணிய விஜய் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலமாகவே சுத்தமாக பேச்சுவார்த்தை இல்லையாம்.

மேலும் தற்போது விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மாமனார் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல யூட்யூப் தளத்திற்கு பேட்டி கொடுக்கும் போது அவர் கூறியுள்ளது விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தி உள்ளது.