சௌமியா என்ற பெண்ணை சுற்றிவளைத்த பொதுமக்கள் !!ஆம்புலன்சில் அசால்டாக தப்பிய இளம்பெண் !!

கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சீனிவாசன் மனைவியான சௌமியா தனக்கு பல அமைச்சர்களின் தெரியும் என்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பல பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார். இதனால் இவர் தேடப்பட்டும் வந்துள்ளார் இந்நிலையில் கோவையில் அவர் இருப்பதாக தகவல் வந்துள்ளது இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் இதை அறிந்த பொதுமக்கள் சௌமியா விட ஏமாந்தவர்கள் அனைவரும் கிளம்பி காவல் நிலைய வளாகத்திற்கு வந்தடைந்தனர்.

காவல் நிலையத்தின் உள்ளே வந்த சௌமியாவின் வழக்கறிஞர்கள் பெண் என்பதால் மறுநாள் காலையில் விசாரிக்குமாறு இரவில் காவல் நிலையத்தில் வைக்க முடியாது எனவும் வாதிட்டனர் இதனால் காவல்துறையினர் வேறு வழியின்றி அவர்களை காலையில் வந்து ஆஜராகுமாறு கூறி உள்ளனர் ஆனால் வெளியே சென்றால் ஏமாந்தவர்களிடம் மாட்டிக் கொள்வோம் என உள்ளேயே தயங்கி தயங்கி இருந்துள்ளனர்.

பிறகு வாடகை கார் ஒன்று வரை வைத்து கிளம்பும் முயற்சித்தபோது பொதுமக்கள் சூழ்ந்ததால் செல்ல முடியாமல் உள்ளேயே அமர்ந்திருந்தனர் ஒருகட்டத்தில் நாடகமாடிய சௌமியா நான் கர்ப்பமாக இருக்கிறேன் ஆச்சிதிணறல் வருகிறது என்று மயங்கி விழுந்துள்ளார் இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து அங்கிருந்து அழகாக தப்பினார் சௌமியா.மறுநாள் காலையும் காவல் நிலையத்திற்கு ஆஜராகாமல் எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.