சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தை பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

படம் பார்த்த அனைவருமே சூர்யாவின் சூரரைப்போற்று வேற ராகம் எனக் கூறி வருகின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் வந்த சூர்யா படங்களில் இதுதான் பெஸ்ட் எனும் அளவுக்கு படம் சிறப்பாக இருப்பதாக தொடர்ந்து கமெண்ட்டுகள் இணையதளங்களில் தெறித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தல அஜித் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு, “என்ன சூர்யா, இப்படி மிரட்டி விட்டீங்க” என்று கூறியதாக ஒரு தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இது உண்மையா? பொய்யா? என்பதை அஜித் தரப்பு தான் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் சூர்யாவுக்கும் அஜீத்துக்கும் நல்ல உறவு இருப்பதாகவும் கண்டிப்பாக அஜித் படத்தை பார்த்து இருப்பார் என ஆணித்தரமாக கூறி வருகின்றனர்.