நடிகர் சூர்யா நீண்ட காலமாக ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டுமென போராடி வந்தார் அந்த வகையில் சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது, இந்த நிலையில் சுதா கொங்காரா அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அந்த வகையில் அடுத்ததாக சுதா கொங்கரா அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் கொஞ்சம் காலதாமதம் ஆகும் என தெரிகிறது.

அதனால் அதற்கு இடையில் வேறு ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுதா கொங்கரா இந்த திரைப் படத்தில் ஹீரோவாக சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் சூர்யாவும் கார்த்தியும் தங்களது படங்களில் இயக்குனர்களை மாற்றி மாற்றி நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அந்த வகையில் தற்போது சூர்யாவை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.