தல அஜித் தற்போது தன்னுடைய 60வது திரைப்படமாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக தல அஜித் நடிக்கும் தல 61 திரைப்படத்தை யார் இயக்க போகிறார் என்னும் கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. ஏற்கனவே இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க போகிறார் என்னும் தகவல் வெளியானது.

அந்த தகவல் தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதோடு இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை துவங்கியிருப்பதாகவும் தெரிகிறது. இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதையாகதான் இருக்குமாம். என்ன தல ரசிகர்களே கொண்டாட ரெடியா ?