கொரோனா காரணமாக எல்லா சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை மாறி வருகிறது.

முழுவதும் பிரச்சனை முடிந்துவிட்டதா என்றால் இல்லை, ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டிய நேரம்.

அண்மையில் தான் அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது, அஜித்தும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்தின் பெயர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
படத்தில் அஜித்தின் ஈஸ்வர் மூர்த்தி ஐபிஎஸ் என்பது தானாம்.

அதன்படி வெளிநாடுகளில் நடக்கும் காட்சிகளை, டில்லியில் நடப்பது போன்று திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளனர் எனவும், வருகிற ஜனவரி மாதம் டில்லியில் அந்த காட்சிகளை படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தத்தில் இனி படத்தின் மீத காட்சிகள் மொத்தத்தையுமே ஹெதராபாத் மற்றும் டில்லியில் நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். என்னதான் மாற்றம் (Valimai shooting unexpected decision by team) வந்தாலும் இயக்குனர் வினோத் இந்த படத்தை தரமான திரைப்படமாக எடுப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் அடித்து கூறப்படுகிறது.