சற்றும் எதிர்பாராத தல 61 கூட்டணி! இயக்குனர் இவரா? அஜித் அதிரடி முடிவு ! ஆட்டம் காணும் திரையுலகம் !

வலிமை படத்திற்கு பிறகு தல அஜித் தல61 படத்தில் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி இப்போது கோலிவுட் வட்டாரங்களில் எழத் தொடங்கிவிட்டது.

வலிமை படமே இன்னும் பாதி படம் முடிக்கப்படாத நிலையில் தல அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார். முதலில் இயக்குனர் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அந்த வகையில் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது ஒரு பெண் இயக்குனர் என்று தெரிந்தவுடன் கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது.

அவர் வேறு யாருமல்ல. இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா தான். ஏற்கனவே தளபதி65 படத்தை இவர் தான் இயக்க இருந்த நிலையில் சில குளறுபடிகள் ஏற்பட்டது.

சூரரை போற்று படத்தின் டீசரை பார்த்து விட்டு தல அஜீத் சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தாராம். அந்த வகையில் சமீபத்தில் சுதா கொங்கரா தல அஜீத்தை சந்தித்து கதை கூறியுள்ளார்.

அந்த கதை பிடித்துப் போகவே அதற்கான வேலையில் இறங்கிவிட்டாராம் சுதா கொங்கரா. சில மாற்றங்களைச் செய்தால் போதும் என கூறியுள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து திறமையான இயக்குனர்கள் உடன் களமிறங்கும் தல அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் என்பது மட்டும் உறுதி.

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தின் தகவலை சில மாதங்களுக்கு முன்னால் நியூஸ்டிகியில் தெரிவித்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.