சந்தோஷமா ட்வீட் போட்ட மாஸ்டர் இயக்குநர்.. செம காண்டான தளபதி ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை அறிவிக்க உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரது இந்த அதிரடியான அறிவிப்பை பார்த்த தளபதி ரசிகர்கள், மாஸ்டர் அப்டேட் விடாம உங்க படத்தின் அப்டேட்டை விடுறீங்களே என அப்செட் ஆகி கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். சில தளபதி ரசிகர்கள், லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

4வது படம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தியின் கைதி படத்தை கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட்டு, ஒட்டுமொத்த இந்திய பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ரெடியாகி விட்டார்.

நாளைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ரசிகர்களே.. நாளை மாலை 6 மணிக்கு, என்னோட அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். என்ன படம்? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எங்க படத்துக்கு அப்டேட் கேட்டா

மாஸ்டர் படம் இன்னும் வெளியாகாத நிலையில், எப்போது வெளியாகும் என்று கூட அறிவிக்கப்படாத நிலையில், தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் எனும் லோகேஷ் கனகராஜின் இந்த அப்டேட், விஜய் ரசிகர்களை ரொம்பவே அப்செட் செய்துள்ளது. “எங்க படத்துக்கு அப்டேட் கேட்டா.. உங்க படத்துக்கு அப்டேட் விடுறீங்க லோகேஷ் ப்ரோ என கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

எங்களுக்கு என்ன மரியாதை

இன்னும் கொஞ்சம் கடுப்பாகிய சில விஜய் ரசிகர்கள், “ஒவ்வொரு ட்வீட்க்கும் வந்து நின்னும் அப்டேட் தரலனா அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை” என மீம்களை போட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள், அண்ணா அப்டேட் கொடுங்கண்ணா என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

டி சர்ட் போராட்டம்

மாஸ்டர் படக்குழுவினர் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட்ட க்ரூப் புகைப்படத்தை எடிட் செய்து அப்டேட் தர முடியாது போடா என இந்தி தெரியாது போடா டி சர்ட் போராட்டம் போல டிரெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர். கடுப்ப கிளப்பாதீங்க பாஸ் என சிலர் அதற்கும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

என்ன படம்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படியொரு ட்வீட் போட்டுள்ள நிலையில், ஒருவேளை இவரே தளபதி 65 படத்தை இயக்கப் போகிறாரா? என்றும், அல்லது தலைவர் 169 படமா? அல்லது மகேஷ் பாபுவின் 28வது படமா? கார்த்தி உடன் கைதி 2வா? அல்லது வேறு என்ன புது புராஜெக்டா? என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதுவா இருந்தாலும், நாளைக்கு மாலை 6 மணிக்கு தெரிஞ்சுடும்.. வெயிட் பண்ணலாமே பாஸ்!