ஒரே பெண்ணுடன் மூன்று மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்!! கேரளத்து அழகியை வைத்து நடந்த மோசடி !!

சேலம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவர் புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் இவர் பல நாட்களாக திருமணத்திற்காக பெண் தேடி வந்துள்ளார் இந்நிலையில் 35 வயதை கடந்த சக்திவலுக்கு கண்ணன் என்ற புரோக்கர் பழக்கமாகி இருக்கிறார் அவர் தன்னிடம் ஒரு அழகான பெண் இருப்பதாகவும் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாகும் நான் சொன்னால் அவர்கள் உடனடியாக திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் எனவும் ஆசைவார்த்தை கூறி உள்ளார் இதையடுத்து பெண் பார்க்கச் சென்ற சக்திவேல் ரம்யாவை பார்த்து அழகில் வியந்து உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடந்து உள்ளது அப்போது பெண்ணிற்கு ஒரு சவரன் மோதிரம் போட்டுள்ளார் சக்திவேல் ப்ரோக்கர் கமிஷனாக கண்ணனுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாளே தலைமறைவாகி உள்ளனர் இருவரும் இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் அந்த பெண்ணின் சொந்த ஊருக்குச் சென்று பார்க்கும் பொழுது அங்கு அப்படிப்பட்ட ஒரு பெண் இல்லை என்பது தெரிய வந்துள்ளது இதனால் ஆத்திரமடைந்து கண்ணனை தேடி வந்துள்ளார் சக்திவேல் கள்ளக்குறிச்சி அருகே ஒரு காரில் வேறு ஒரு பெண்ணுடன் புரோக்கர் கண்ணன் சுற்றி வருவதாக தகவல் கிடைத்தபோது அங்கு சுற்றிவளைத்து பிடித்துள்ளார்.

அங்கு கள்ளகுறிசி சேர்ந்த ஒரு இளைஞனை ஏமாற்றுவதற்காக பெண்ணுடன் வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது காவல்துறையினர் அழைத்து விசாரித்ததில் கண்ணன் என்பவர் அந்த ரம்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து இதேபோல் விஸ்வநாதன் மற்றும் பாலமுருகன் என்பவரையும் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது ப்ரோக்கர் கண்ணன் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் ஏமாந்த வருத்தத்தில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறது தற்போது ரம்யா என்ற பெண்ணையும் இந்த குற்றத்தில் ஹரி என்ற மற்றொரு புரோக்கரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.