அஜித்குமார் மற்ற மொழி படங்களில் நடிப்பதே இல்லையாம், ஆனாலும் கூட அன்புக் கட்டளையாக இரண்டு படங்களில் நடித்துள்ளார். 2001-இல் வெளிவந்த பாலிவுட் படமான அசோகா என்ற படத்தில் ஷாருக்கானுக்கு அண்ணனாக அஜித்குமார் நடித்து இருப்பார்.

அஜித் நடித்த அந்த படத்தின் வீடியோவை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் வெளியிட்டுள்ளது, இதனை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த படத்திற்கான சம்பளத்தை கூட அவர் வாங்கவில்லையாம் கூடுதலாக 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அஜித் நடிப்பில் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத சூழ்நிலையில் ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

ஒரு பேட்டியில் ஷாருக்கான் கூறுகையில் சென்னையில் விருது வழங்கும் விழாவில், அஜித் என்ற பெயரை சொன்னதும் ரசிகர்கள் அவரைப் பேசவிடாது அளவிற்கு கூச்சலிட்டனராம்.

அப்போது தான் தல அஜித்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார், என்னுடன் படத்தில் நடிக்கும் போது இவரின் புகழ் எனக்கு தெரியாமல் போய் விட்டது என்னும் வருத்தம் தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.

தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் ரகசியம் என்று பார்த்தால் மீண்டும் அஜீத் குமாரை வைத்து தயாரிப்பதற்கு பக்கம் ஸ்கெட்ச் போட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

அஜித்தின் வீடியோ