காதல் விவகாரத்தால் அக்காவை தீர்த்துக்கட்டிய தங்கை!! கேரளாவில் நடந்தேறிய திகில் சம்பவம் !!

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் சிவானந்தம் மற்றும் அவரது மனைவி ஜீஜி இவர்களுக்கு விஷ்மயா மற்றும் ஜீத்து என்று 2 மகள்கள் உள்ளனர் இவர்கள் இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை பிறவிகள் இதில் விஸ்மயா மூத்த மகள் ஆவார். ஜீத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை காதலித்து வந்துள்ளார் இதை பிடிக்காத அவரது பெற்றோர் ஜீத்துவை வீட்டில் வைத்து கொடுமை படுத்தியுள்ளனர் அவரது அக்காவான விஷ்மயா இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அவரால்தான் இந்த காதல் வீட்டிற்கு தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த காதல் முறிவும் இதற்கு முக்கிய காரணமும் அவர் தான் எனவும் சொல்லப்படுகிறது சம்பவத்தன்று வெளியே செல்ல திட்டமிட்டிருந்த பெற்றோர்கள் ஜீத்தூவின் கைகளை கட்டிவிட்டு அவரது அக்கா விஷ்மயாவை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜீத்து தனது அக்காவிடம் கெஞ்சி அழுது புலம்பி தனது கட்டை அவிழ்த்து விடுமாறு கேட்க மனமிரங்கிய விஷ்மயா கட்டை அவிழ்த்து விட உடனே அருகில் இருந்த கத்தியை எடுத்து விஷ்மயாவை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார்.

அதன்பிறகு மன்னனை ஊற்றி எரித்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார் மறுநாள் பெற்றோர்கள் வந்து பார்க்கையில் விஷ்மயா எரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் தனது மற்றொரு மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி கக்கநாடு பகுதியில் ஜீத்தூவை கண்டுபிடித்தனர்.விசாரணையில் தனது அக்காவின் மீது பெற்றோர்கள் பாசம் அதிகம் வைத்திருந்ததாலும் என் காதல் தோல்வினாலும் தனது அக்காவை தானே கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.