காதல் பட பாணியில் பள்ளி மாணவியை காதலித்த ஹரிஹரன் !! நடுரோட்டில் பட்டப்பகலில் அடித்துக்கொலை !!

கரூர் மாவட்டம் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருபவர் ஜெயராம் இவரது மகன் ஹரிஹரன் அதே பகுதியில் பழைய பேப்பர் மொத்த வியாபாரம் செய்யும் வேலன் என்பவரின் மகள் பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார் இவரும் ஹரிஹரனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் மேல் படிப்பை காரணம் காட்டி மாணவி வீட்டில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் அதுமட்டுமின்றி கொரானா விடுமுறையை பயன்படுத்தி இரண்டு வருடங்களாக அந்த பெண்ணை மெல்ல மெல்ல மாற்றி ஹரிஹரனை மறக்கடிக்க செய்துள்ளனர் இதை அடுத்து கல்லூரி முதலாமாண்டு சேர்ந்த மாணவி கல்லூரிக்கு சென்று வரும் பொழுது எல்லாம் ஹரிஹரன் விடாமல் துரத்தித் துரத்தி தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


ஆனால் மாணவியோ ஹரிஹரனை முற்றிலுமாக மறந்து பெற்றோர்களின் ஆசைக்கு இணங்க நடந்து வந்ததாக கூறப்படுகிறது இதனிடையே ஹரிஹரன் தன்னை துரத்துவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார் மாணவி இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று கோவிலுக்கு வருமாறு ஹரிஹரனை மாணவியின் தந்தை வேலன் அழைத்துள்ளார் அங்கு வந்து ஹரிஹரன் இடம் தனது மகள் மிகவும் சிறிய பெண் அவளை விட்டு விடுமாறு பக்குவமாக எடுத்து உரைத்திருக்கிறார் இதனை காதில் வாங்கிக் கொள்ளாத ஹரிஹரன் சினிமா வசனங்களையும் அவள் இல்லை என்றால் இறந்து விடுவேன் என்பது போல் திரும்ப திரும்ப பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெரியப்பா மாமா மற்றும் சித்தப்பா ஆகிய மூவரும் வேலனின் கட்டுப்பாட்டை மீறியும் ஹரிஹரன் தாக்கியுள்ளனர் பட்டப்பகலில் நடுரோட்டில் ஹரிஹரன் அடித்து கீழே தள்ளி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளனர் இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஹரிஹரன் மயக்க நிலையில் இருந்துள்ளார் தாக்கியதில் உடன்பாடு இல்லாத மாணவியின் உறவினர்கள் சிலபேர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதையடுத்து சம்பவம் அறிந்து காவல்துறை விசாரணைக்கு நேரில் வந்து மாணவியின் உறவினர்கள் 7 பேரை கைது செய்தது ஹரிஹரனின் உடலை பார்த்து அவர்களின் உறவினர்கள் மற்றும் அம்மா கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.