கர்ப்பப்பை கட்டியை குழந்தை என்று ஏமாற்றிய சாமியார்!! ஆத்தா கொடுத்த குழந்தை ஸ்கேனில் தெரியாது!!

திருச்சி அருகே உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி இவரது மனைவி அகிலாம்பாள் இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார் இவர்களுக்கு திருமணமாகி இருபது வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை இதனால் பல கோவில்களுக்கும் பல பூஜைகளும் செய்துவந்துள்ளார். ஏற்கனவே இரு முறை கருவுற்ற அகிலாவிற்கு இருமுறையும் குழந்தை கருவிலேயே அழிந்துள்ளது இதனால் மிகுந்த வேதனையில் இருந்த அந்தப் பெண் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நல்லுசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது அவர் தனது சொந்த ஊரில் தனது நிலத்திற்கு பின்னால் கொட்டகை ஒன்று அமைத்து அதில் கோயில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அனைவருக்கும் குறி சொல்லி வந்துள்ளார்.

அவர் கொடுக்கும் பச்சை இலை ஒன்றை சாப்பிட்டு வந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் எனவும் அனைவரையும் நம்ப வைத்துள்ளார் இவ்வாறு அங்கு சென்ற அகிலாம்பாள் வாரம் வாரம் ஐந்தாயிரம் என கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார் பச்சை இலை சாப்பிட்ட சில நாட்களிலேயே வயிறு பெருசாக ஸ்கேன் செய்யப்போவதாக கூறியுள்ளார் இது ஆத்தா கொடுத்த குழந்தையை ஸ்கேன் செய்ய கூடாது என பயமுறுத்தி இருக்கிறார் சாமியார் ஏற்கனவே இருமுறை கலைந்ததால் இம்முறையாவது குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று அந்தப் பெண்ணும் ஸ்கேன் செய்யாமல் இருந்துள்ளார் இப்படியே சென்று கொண்டிருக்க ஆறு மாதம் கழித்து ஸ்கேன் செய்து உள்ளார் அந்தப் பெண் அதில் தனக்கு இருப்பது கர்ப்பப்பையில் கட்டி எனவும் குழந்தை ஏதும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சாமியாரிடம் கேட்டபொழுது ஆத்தா கொடுத்த குழந்தை ஸ்கேனில் தெரியாது எனவும் பத்தாவது மாதம் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் எனவும் வளைகாப்பு நடத்துமாறும் கூறியுள்ளார் இதையடுத்து அவரது கோவிலிலேயே வெகுவிமர்சையாக வளையகாப்பு நடந்துள்ளது இவர் குறித்துக் கொடுத்த தேதியில் குழந்தை பிறக்காததால் கேட்ட அந்த பெண்ணிற்கு மாற்றிமாற்றி தேதியை கொடுத்து 10 மாதத்துக்கு மேல் ஆனதால் சாமியாரிடம் குரலை எழுப்பி உள்ளார் அந்த பெண் அதற்கு இந்த சாமியார் இவரை மிரட்டி உள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தற்போது தலைமறைவாக உள்ள அந்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.