தமிழ் சினிமாவில் மிகவும் லக்கி இயக்குனராக வலம் வருபவர் வினோத். பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைப்பதில் வல்லவர்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன தல அஜித் உடனடியாக நேர்கொண்ட பார்வை எனும் பட வாய்ப்பைக் கொடுத்தார்.

அஜித் நம்பியது போலவே அந்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கொடுத்தார் வினோத். உடனடியாக வினோத்துக்கு தனது அடுத்தப் பட வாய்ப்பையும் தொடர்ந்து வழங்கியுள்ளார் தல அஜித்.

அந்த வகையில் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்புகளுக்கு காத்துக்கொண்டிருக்கிறது வலிமை படக்குழு. இதற்கிடையில் இதுவரை வலிமை படத்தைப் பற்றியும் அஜித்தை பற்றியும் எந்த ஒரு பேட்டியும் கொடுக்காத வினோத் முதல் முறையாக அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

தல அஜீத் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் எப்போதுமே நேர்மறையான எண்ணங்களை வைத்துக் கொள்வார் எனவும், குடும்பத்தைப் பற்றியும் ரசிகர்களின் குடும்பத்தைப் பற்றியும் மிகவும் அக்கறை கொண்டவர் எனவும் கூறியுள்ளார்.

இது தல அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இருந்தாலும் வினோத் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் தராததால் அவர் மீது கொஞ்சம் அப்செட் ஆகவும் இருக்கின்றனர்.