கணவனின் நண்பன் மனைவிக்கு தகாத நண்பன் !! விபரிதத்தில் முடிந்த கெட்ட பழக்கம் !!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி ராதிகா தம்பதியருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.திருமணம் ஆன முதலே இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.ஓட்டுநர் வேலை செய்துவரும் மாடசாமி சரிவர வீட்டுக்கு வராமல் போதையில் வண்டியிலேயே தங்குவதை வழக்கமாக்கி கொண்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தனது கணவர் எங்கு உள்ளார் என்பதை அவரது நண்பரான செல்வகுமார் மூலம் அறியும் நிலை ஏற்பட்டது கணவருடன் கோபித்துக்கொண்டு ராதிகா கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தனது பெற்றோர் வீட்டில் சென்று வசித்து வந்தார்.மாடசாமி தனது மனைவி ராதிகா வசிக்கும் கிராமத்தில் நடைபெற இருக்கும் திருவிழாவை முன்னிட்டு வந்துள்ளார் அப்போது தனது மனைவி ராதிகா நண்பர் செல்வகுமாருடன் அடிக்கடி போனில் பேசி வருவதை கண்டுபிடித்து அதனை நிறுத்திக் கொள்ளுமாறு தனது மனைவியை எச்சரித்துள்ளார்.


ஆனால் அதனை கேட்காமல் தொடர்ந்து ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்ததால் ஆத்திரமடைந்த மாடசாமி வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி ராதிகாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் அவரது கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்த மாடசாமி காவல்நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார் தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மனைவி ராதிகாவும் தனது நண்பருக்கு ஏற்பட்ட பழக்கத்தால் மனைவி ராதிகாவை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் மாடசாமி. இதையடுத்து செல்வகுமார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.